Wednesday, December 30, 2009

பக்தி எப்போது வரும்?

 பக்தி எப்போது வரும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு, காரணம் நான் பெரிய பக்தி மான் ஆனால் எனது மகன் நாத்திகம் பேசுகிறான் அவனுக்கு எப்போது பக்தி வரும் என்று ஏங்குபவர்கள் ஏராளம். பக்தி ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் உதரணமாக நாயன்மார்களை எடுத்க்கொல்லுங்கள்
* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது           நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும்.
* ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை           அடைந்தவர் கண்ணப்ப நாயனார்.
* சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே                               சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில்.
ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையிலும் வரலாம் முதுமையிலும் வரலாம் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே அவன் திருவடியை  அடையிந்து விடலாம் .

No comments:

Post a Comment