Monday, November 9, 2009

யார் பாடியது தேவாரம் ?

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடபற்றவை மூவர் தேவாரம் என்று நாம் பெரியோர்கள் சொல்ல கேட்டு இருப்போம். அதற்கு பிற்பாடு மாணிக்கவாச சுவாமிகளின் திருவாசகத்தையும் சேர்த்து நால்வர் தேவாரம் என்று அழைக்க பட்டது. ஆனால் உண்மையில் யார்  பாடியது தேவாரம் என்று அறியத்தானே இந்த தொகுப்பு!

சம்பந்தர் பாடியதன் பெயர் :- திரு கடைகாப்பு 
சுந்தரர் பாடியதன் பெயர்    :- திரு பாட்டு
மாணிக்கவாசகர்                 :-  திரு வாசகம் (யாவரும் அறிந்த ஒன்றே)

அப்பர் என்று சம்பந்தரால் அன்போடு அழைக்கப்பட்ட நாவுக்கு அரசராக விளங்கிய நாவுக்கரச பெருமான் பாடிய பாடல்களின் தொகுபே தேவாரமாகும். 

இதை பறைசாற்றும்வகையில் சிவபெருமான்,
சம்பந்தன் தன்னை பாடினான்,
சுந்தரர் பொன்னை பாடினான்,
மனிச்கவசகர் ஞானத்தை பாடினான்,
நாவுக்கசர் என்று என்னால் பெயர் சூட்ற பெற்ற அப்பரோ என்னை பாடினான் என்றார் .
அதனால் தானோ என்னவோ நம் பெரியோர்கள் நாவுக்கசர் பாடியது தான் தேவாரம் என்று எழுதி வைத்தார்கள். இந்த அறிய தகவல் அனைவர்க்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இதை அடியேன் பதிவிடுகின்றேன்.

No comments:

Post a Comment